Stacks Image 3
  • ஒரு வரைபடம் காட்டப்படும். அதில் புதைத்து வைக்கப் பட்ட சில சொற்களுக்கான மறைதிறவுகள் தோன்றி மறையும்.
  • அந்த மறைதிறவுகளை நினைவில் கொண்டு புதையல் கட்டங்களில் அவை குறிக்கும் சொற்களைக் கண்டறிய வேண்டும்.
  • புதையல் 10x10 கட்டங்களால் ஆனது,சுட்டியை ஒரு கட்டத்தில் சொடுக்கி இழுப்பதன் மூலம், சொற்களைக் கண்டறியலாம்.
  • சொற்கள் கீழிருந்து மேலாகவோ, மேலிருந்து கீழாகவோ, குறுக்காகவோ, இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ புதைந்திருக்கலாம்.
  • ஒரு கட்டத்தை ஒரு சொல்லுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும்.
  • நீண்ட சொற்களும், அரிதான சொற்களும் மதிப்பு மிகுந்தவை.
  • வரைபடத்தில் உள்ள மறைதிறவுகளை மறந்துவிட்டால், மீண்டும் வரைபடத்தை 10 பொற்காசுகள் தந்து காணலாம்.
  • ஆட்டத்தை நீங்கள் முடித்தவுடன், நீங்கள் கண்டறியாத புதையல் சொற்களைக் கட்டங்களில் காணலாம். அட்டவனையில் சொல்லின் புகழ் மற்றும் நீளம் அதன் மதிப்பை எவ்வாறு கூட்டுகிறது என்று காட்டும்.
  • சொல் புகழ் நீளம் மதிப்பெண்
    யானை 6 2 12
    வாரணம் 10 4 40

Available only in Desktop Version
மேசைக்கணினியின் பதிப்பில் மட்டுமே கிடைக்கும்.