
நம்முள் பலர் 'இலக்கியத்திற்கும் எனக்கும் இடைவெளி அதிகம்' என்று எண்ணக்கூடும். இலக்கியம் பேசும் உணர்வுகள் என் வாழ்வின் தேடல்களுக்குச் சொல்ல வேண்டியவை எதுவும் இல்லை என்று முடிவு செய்திருக்கக்கூடும். அதுவும் சங்கப் பாடல்கள் போன்ற இரண்டாயிரமாண்டுத் தொன்மை கொண்ட இலக்கியத்திற்கும் தொழில்நுட்பத்தை நோக்கி பயணம் செய்யும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று வினவக்கூடும். இக்கேள்விகளுக்கான விடையை என் நான்காண்டு பயணத்தில் உயிரியல், உளவியல், சுற்றுப்புறச் சுழல், கல்வி, கேளிக்கை போன்ற தற்காலத் துறைகளில் நான் கண்டு வியந்த சங்க இலக்கியத்தை எதிரொலிக்கும் செய்திகளை இவ்வுரையில் தொகுத்து வழங்குகிறேன்.