aRi Talks Poster
aRi Talks Poster

காலந்தோறும் கவிதைகளின் வடிவம் பெரும் மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது. கவிதைகளின் அடுத்த வடிவம் என்னவாக இருக்கலாம் என்று இந்த உரை தேடுகிறது. தன்னாள்வியல் கோட்பாடு, வெளியில் நிகழும் மாறுதல்களைத் தரவுகளாக ஒரு இயந்திரத்துக்கு உள்ளீடாகத் தந்து, அது தன்னைத் தானே மாறுதல்களுக்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ளும் அல்லது மாற்றிக்கொள்ளும் தன்மையை விளக்கும் கோட்பாடாகும். காலத்துக்கும், படிப்போரின் மனநிலைக்கும் ஏற்றார்போல் மாறும் தன்னாள்வியல் தன்மை, கவிதைகளுக்கு உண்டு. மாறும் உலகை படம்பிடித்து அதை எதிரொளிக்கும் கவிதைகளின் தன்மை தன்னாள்வியலுக்கும் உண்டு. இவ்விரண்டும் ஒன்றானால், தன்னாள்வியல் கோட்பாடுகளோடு கவிதைகளை உருவாக்கினால் அக்கவிதைகள் எப்படி இருக்கும்? கவிதையைச் சுவைப்போருக்கும் கவிதைக்கும் நடுவில் இருக்கும் உறவு எப்படி மேம்படலாம் என்று இந்த உரை ஆராய்கிறது.

×

Disclaimer

All proceeds from the course will go towards our language research and language literacy projects.