பிழை
0
|
துல்லியம்
100 %
|
வேகம்
100
|
நேரம்
0
|
பிழை
0
|
துல்லியம்
100 %
|
வேகம்
100
|
நேரம்
0
|
வேகி
தமிழ்த் தட்டச்சு
வேகி என்பது தமிழ்த் தட்டச்சு பயில்வதற்கான ஒரு தளம். உங்களுக்கு விருப்பமான விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்து தமிழ்த் தட்டச்சு பயிலலாம். இது ஆசிரியர் இன்றி உங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு தட்டச்சு பயிலும் தளம்.
உங்கள் கணிப்பொறியில் அல்லது மடிக்கணினியில் இந்தத் தளத்தை இரண்டு வகைகளில் நீங்கள் பயன்படுத்தலாம்.
- பயிற்சி
- வேகமள
இந்தத் தளம் கைப்பேசிக் கருவிகளுக்காக வடிவமைக்கப்பட்டதல்ல.
பயிற்சி
பயிற்சி எனும் பகுதியில் தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சு செய்து பயில 23 வகுப்புகளாகப் பிரித்துள்ளோம். இந்தப் பிரிவுகள் எங்கள் பயில் பாடத்திட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட பயிற்சிகள். ஒவ்வொரு வகுப்பிலும் பல்வேறு பயிற்சிகள் அடங்கியிருக்கும்.
வேகமள
உங்கள் பயிற்சிக்குப் பிறகோ அல்லது முன்னரோ உங்கள் தட்டச்சு வேகத்தை நீங்கள் அளக்க இந்தப் பகுதியில் இருக்கும் பத்தியைத் தட்டச்சு செய்து அளந்து கொள்ளலாம். இந்தப் பகுதியில் இருக்கும் பத்திகள் இணையத்தின் பல்வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
விசைப்பலகை
தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய வெவ்வேறு வகை விசைப்பலகைகள் உள்ளன. உங்கள் கணினியில் தமிழ் விசைப்பலகைகள் ஏதும் இல்லை என்றாலும் எங்கள் தளத்தில் நாங்கள் கொடுத்துள்ள எளிய ஒலிபெயர்ப்பு விசைப்பலகை மூலம் நீங்கள் தட்டச்சு பயிலலாம்.
எங்கள் விசைப்பலகை தவிர, Tamilnet99, NHM Writer, eKalappai, Anjal போன்ற பல தமிழ் விசைப்பலகைகள் இணையத்தில் உள்ளன. அவற்றை நீங்கள் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி அந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தலாம்.
புள்ளியியல்
நீங்கள் தட்டச்சு செய்யும்போது நான்கு புள்ளியியல் விவரங்கள் கணிக்கப்படுகின்றன.
- பிழை
- துல்லியம்
- வேகம்
- நேரம்
பிழை
கொடுக்கப்பட்ட பயிற்சியில் நீங்கள் எத்தனை எழுத்துக்கள் பிழையாகத் தட்டச்சு செய்துள்ளீர்கள் என்பதை இந்த எண் குறிக்கும்.
துல்லியம்
நூறு எழுத்துக்களுக்கு எத்தனை எழுத்துக்கள் சரியாகத் தட்டச்சு செய்துள்ளீர்கள் என்ற புள்ளியியலைத் துல்லியம் குறிக்கும். துல்லியம் 95% மேல் இருக்கும்போதுதான் வேகம் என்ற புள்ளியியலுக்கு மதிப்பு இருக்கும்.
வேகம்
நீங்கள் ஒரு நிமிடத்தில் எத்தனைச் சொற்களைத் தட்டச்சு செய்கிறீர்கள் என்ற வேகத்தை இந்தப் புள்ளியியல் குறிக்கும். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கீழுள்ள நிலைகளைக் கொண்டு அறியலாம்.
- துளிர் நிலை : 1 - 5 சொற்கள் / நிமிடம்
- முகை நிலை : 6 - 15 சொற்கள் / நிமிடம்
- மலர் நிலை : 16 - 25 சொற்கள் / நிமிடம்
- பூ நிலை : 26 - 35 சொற்கள் / நிமிடம்
- புலி நிலை : 36 - 45 சொற்கள் / நிமிடம்
- புயல் நிலை : 46 - 55 சொற்கள் / நிமிடம்
- மின்னல் நிலை : 56+