தொழில்முனைவோரும் முதலீடும் - Becoming an Entrepreneur |
சுப்ரமணியம் BCom, LLB

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் தொழில் முனைவோரின் பங்களிப்பு இன்றியமையாதது. புதிய தொழிலைத் தொடங்க செம்மையான திட்டமும், ஆற்றலும், மனித வளமும் மட்டுமன்றி திடமான நிதி சேர்க்கையும் அவசியமாகிறது.

நவம்பர் 14, 2023, சனி

வேதியியல் காதல் - For the Love of Chemistry |
ஆனந்தி நாராயணசாமி MSc, MS

நறுமணத்திற்கும், இரத்தினங்களில் மினுமினுப்பிற்கும், பட்டாசு வெடிப்பின் ஓசைக்கும், உணவின் சுவைக்கும், இரு பொருளுக்கிடையேயான உராய்விற்கும் அடிப்படை அறிவியல் பின்னணியை எடுத்துரைக்கும் உரை.

செப்டம்பர் 9, 2023, சனி

கூவத்தின் கரைகளிலே - On the shores of the Coovam |
துரைசாமி நவநீதம் PhD

சென்னை தனது 384வது ஆண்டு நிறைவை இம்மாதம் கொண்டாடுகிறது. இத்தருணத்தில் சென்னையை வாழவைக்கும் அதன் ஆறுகளையும் கால்வாய்களையும் பற்றி அறிந்து கொள்வோம்.

ஆகஸ்ட் 19, 2023, சனி

பயனர் இடைமுகமும் நேருணர்வும் - Unraveling the UI/UX dichotomy |
சாய் கிஷோர் T V

மென்பொருள் பொறியியல் வட்டாரத்தில் புழக்கத்தில் இருக்கும் UI/UX - பயனர் இடைமுகமும், பயனர் நேருணர்வும் – அவற்றின் உருவாக்கம் மற்றும் பரிணாமங்கள் பற்றியும், அவற்றிற்கிடையேயான பாகுபாடுகள் பற்றியுமான உரை.

ஜூலை 15, 2023, சனி

நாட்டுப்புறப் பாடல்களும் மனிதரின் உணர்வுகளும் | வேல்முருகன்

தமிழக ஊரக மக்களின் மனத்தில் எழும் இயல்பான எண்ணங்களைக் கோர்வையாக்கி அதில் வட்டார வாசனையையும் பிணைத்து எளிமையான மெட்டுக்களுடன் இசைக்கப்படும் நாட்டுப்புறப் பாடல்கள்பற்றிய உரை

ஜூன் 17, 2023, சனி

தந்தை மகற்காற்றும் நன்றி | ப . சேரலாதன் M.Com., M.A. ( Linguistics)

ஓர் இலக்கியப்படைப்பினை அணுகும்போது படைப்பாளியின் வாழ்க்கையை அடிக்குறிப்பாகக் கருதி அப்படைப்பிற்கு அடித்தளமாகக்கொள்வதைப் பற்றிய உரை

மே 13, 2023, சனி

கோலொடு நின்றான் இரவு | ஹர்ஷ் ராஜ் LLM

இந்திய வரி சூழலில் ஜிஎஸ்டியின் (GST) பங்கினைப் பற்றிய உரை

ஏப்ரல் 15, 2023, சனி

உலகளாவிய தமிழர் பரவலும் தொன்மையும் | வேல்கடம்பன்

வெளிநாடுகளில் கிடைக்கும் சான்றுகளையும், இந்தியாவில் நம்மிடையே கிடைக்கும் சான்றுகளையும் கொண்டு தமிழரின் உலகளாவிய தொன்மைக்காலப் பரவல்களை எளிமையாக விளக்கும் உரை.

மார்ச் 11, 2023, சனி

சங்க இலக்கியச் சமகால இயைபு | நந்தினி கார்க்கி BE., MA(Edu)

தற்கால வாழ்வியலில் சங்க இலக்கியத்தின் எதிரொலிப்புகள் பற்றிய உரை

பிப்ரவரி 11, 2023, சனி

தன்னாள்வியல் கவிதைகள் | முனைவர் மதன் கார்க்கி MInfTechSt., PhD

தன்னாள்வியல் கொண்டு சூழலுக்கு ஏற்றாற்போல் மாறும் கவிதைகள் படைப்பது எப்படி என விளக்கும் உரை.

நவம்பர் 13, 2022, ஞாயிறு

புற்றுநோய் - புதிய அணுகுமுறை | சிவசண்முகம் பெருமாள் PhD

புற்றுநோய் செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தை இயங்கவைக்கும் புதிய 'இம்யூனோதெரபி' சிகிச்சைமுறை பற்றி அறிந்துகொள்வோம்.

அக்டோபர் 8, 2022, சனி

வெள்ளம் - காரணிகளும் தீர்வுகளும் | ராஜ் பகத் பழனிச்சாமி BE, MSc

வெள்ளத்தின் காரணிகளையும் அவற்றின் தீர்வுகளையும் விளக்கும் வரைபடங்கள் மிகுந்த ஒரு விளக்கக் காட்சி.

செப்டம்பர் 10, 2022, சனி

செயற்கைக் கருத்தரிப்பு | துரைசாமி நவநீதம் PhD

கருத்தரிப்பின் அறிவியல் பின்னணி மற்றும் செயற்கை கருத்தரிப்பு முறைகள் பற்றிய உரை.

ஆகஸ்ட் 13, 2022, சனி

நெறிசார் மறைபுகல் | வினோத் செந்தில் T B.E

நம் கணினியும் கைபேசியும் பிணையமும் இணையமும் அதில் உள்ள நம் தரவுகளும் பாதுகாப்பாய் உள்ளனவா என்று தெளிவுபடுத்தும் உரை

ஜூலை 9, 2022, சனி

மண்புக்கு மாய்வது மன் | ஆனந்தி நாராயணசாமி MSc, MS

அண்டத்தொடக்கத்திலும் விண்மீன் உலைகளிலும் பல்வேறு அணுக்கள் உருவான கதை

ஜூன் 11, 2022, சனி

மீவெளியும் நிகரிலிக்குறியும் | அர்ஜூன் விஜய் BE, MBA

நிகரிலிக்குறியின் (NFT) பெருகிவரும் செல்வாக்குப் பற்றியும் மீவெளியில் (metaverse) அதன் பங்கு பற்றியும்

மே 14, 2022, சனி

தமிழ்க் குடியின் தொன்மை | முனைவர் இராமசாமி பிச்சப்பன்

தமிழரின் தொன்மையை மரபணுச் சான்றுகளுடன் விளக்கும் உரை

ஏப்ரல் 9, 2022, சனி

பறவைகள் பலவிதம் | முனைவர் ப. ஜெகநாதன்

தமிழ்நாட்டில் உள்ள பறவை வகைகள், அவற்றின் நிலை, பாதுகாப்பு, அவை வாழுமிடங்களின் நிலை குறித்த உரை

மார்ச் 12, 2022, சனி

குரல் வழி நடித்தல் | ருத்ராபதி சேகர்

திரைக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கும் பின்னணிக் குரல் துறையைப் பற்றின உரை

பிப்ரவரி 12, 2021, சனி

சங்கத் தமிழில் பகுத்தறிவுக் கொள்கை | பேரா. முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் PhD

2000 ஆண்டுகளுக்கு முன்னரே சங்க இலக்கியம் கண்ட முற்போக்கு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு, இறைகருதாமை, பெண்ணியம் மற்றும் ஆதிக்க மறுப்பு

நவம்பர் 28, 2021, ஞாயிறு

சோழர்கள் வீழ்த்திய மீன்கள் | முனைவர் துரைசாமி நவநீதம் PhD

வானில் தோன்றிய சிதறுமீன்களும் தமிழகத்தை ஆண்ட சோழர்களும் - வானியலும் வரலாறும் ஒன்றிணைந்த ஆய்வு உரை

அக்டோபர் 09, 2021, சனி

அணுத்துகள் நியூட்ரினோ | D இந்துமதி PhD

அண்டத்தின் அடிப்படைத் துகள்களில் ஒன்றான நியூட்ரினோ, அணுவின் பிற நுண்ணிய துகள்கள் மற்றும் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் ஆகியவை பற்றி

செப்டம்பர் 11, 2021, சனி

பரிசு வரி | திரு GR ஹரி B.Com., FCA

பிறர் நமக்குக் கொடுக்கும் பரிசுகளின் மீது சுமத்தப்படும் வரியான "பரிசு வரி"யின் நுணுக்கங்கள்

ஆகஸ்ட் 14, 2021, சனி

நோய்த் தடுப்பும் நோய் எதிர்ப்பும் | முனைவர் துரைசாமி நவநீதம் PhD

மனிதரில் நோய் எதிர்ப்புத்தன்மை (Immunity) எவ்வாறு செயல்படுகிறது, எதிர்ப்புத் தன்மையைக் கசடற அறிந்த அறிவியல் அறிஞர்கள் அதை எவ்வாறு கோவிட்-19 போன்ற தொற்றுநோய்களின் தடுப்பிற்குப் (vaccination) பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த உரை அறிமுகம் செய்கிறது.

ஜூலை 10, 2021, சனி

இரண்டாவது இயந்திர யுகம் | அர்ஜூன் விஜய் BE., MBA

செயற்கை நுண்ணறிவு உலகில் ஏற்படுத்தும் மாற்றமும் அதன் விளைவான வேலைவாய்ப்பு தாக்காமும்

ஜூன் 12, 2021, சனி

காலக் கணிதம் | முனைவர் துரைசாமி நவநீதம் PhD

திங்கள்களில் அடங்கியுள்ள நாட்களின் எண்ணிக்கையும், அதனால் ஆண்டுகளின் காலநீளம் கொள்ளும் வேறுபாட்டையும் கையாளும் தமிழ்க் காலக்கணக்கீட்டு முறை

மே 8, 2021, சனி

கலை எனும் கண்ணாடி | கலைமாமணி அனில் ஸ்ரீநிவாசன்

மனிதரின் சிந்தனைகளிலும் செயல்களிலும் இசையின் தாக்கம்

ஏப்ரல் 10, 2021, சனி

புதிய வேளாண் சட்டங்கள் - மாற்றமும் சீற்றமும் (New Farm Law 2020 – Changes & Controversies) | முனைவர் தர்மராஜன் சண்முகநாதன் PhD

புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் அவற்றின் நிறை குறைகள்

மார்ச் 13, 2021, சனி

ஐன்ஸ்டீனும் தொல்காப்பியரும் (Einstein & Tholkappiyar) | முனைவர் வடிவேல் மாசிலாமணி PhD

இடம்-பொருள் என்ற இரண்டற்றத் தொடர் பரிமாணம் ஐன்ஸ்டீன் தொல்காப்பியர் இருவரின் பார்வையில்

பிப்ரவரி 13, 2021, சனி

சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்  (Sound Elements of Sangam Literature) | முனைவர் இரா. குணசீலன் PhD

சங்க இலக்கியத்திலுள்ள ஒலி குறித்த செய்திகளின் அடிப்படையில் தமிழ் மொழியில் ஒலிக்குறிப்புச்சொற்கள்

அக்டோபர் 17, 2020, சனி

அறிவியல், இசை ,வாழ்க்கை (Science, Music & Life) | எஸ். தினகர் B. Arch

எளிய, பாதுகாப்பான செய்முறை ‘அறி’வியல் சோதனைகள் மூலம் அறிவியல் கொள்கைகள்

அக்டோபர் 10, 2020, சனி

மரபணு மா(ற்)றினால் (Gene Engineering) | முனைவர் துரைசாமி நவநீதம் PhD

இயற்கையில் ஏற்படும் மரபணு மாற்றங்கள், ஆய்வகங்களில் நடக்கும் செயற்கையான மரபணு மாற்றங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள்

அக்டோபர் 3, 2020, சனி

எண்ணிமநாணயம் மற்றும் மின்காசு - ஓர் அறிமுகம் (Cryptocurrency & Bitcoin – An Introduction) | அர்ஜுன் விஜய் BE, MBA 

எண்ணிம நாணய அமைப்புகளின் செயல்பாடு, ஒழுங்குமுறை, இவ்வகை நாணயங்களின் எதிர்காலம் மற்றும் பிட்காயின் முதலீடு

செப்டம்பர் 26, 2020, சனி

கதிர்வீச்சுத் தொல்லளவை (Radiometric Dating) | ஆனந்தி நாராயணசாமி MSc, MS

அணுவுக்குள் உள்ள, அதன் கருவினுக்குள் ஒளிந்து கிடக்கும் புரோட்டன், நியூட்ரானுக்கும் தமிழகத்தின் கீழடிக்கும் உள்ள தொடர்பு

செப்டம்பர் 19, 2020, சனி

ஏவுகலங்களும் ஏவுகணைகளும் (Rockeets & Missiles) | முனைவர் துரைசாமி நவநீதம் PhD

‘ராக்கெட்டுகள்’ எனப்படும் பல்வேறு வகைப்பட்ட ஏவுகலங்கள், அவற்றை ஏவும் முறைகள், அவற்றில் ஏற்றப்படும் சுமைகள், அச்சுமைகள் வானையும் விண்ணையும் நேரடியாகக் கண்டு தெளிய உதவும் வழிகள்

செப்டம்பர் 12, 2020, சனி

தமிழ் இலக்கிய இலக்கணத்தில் அறிவியல் (Science in Tamil Literature & Grammar) | கண்ணபிரான் ரவிசங்கர்  PhD

இயற்கை மிகு தமிழ் மொழியில், அறிவியலுக்கான தேடலை இலக்கிய இலக்கணங்கள் எங்கெல்லாம் பேசுகின்றன

செப்டம்பர் 5, 2020, சனி

மனிதரின் நெடும்பயணம் | ஆனந்தி நாராயணசாமி MSc., MS

ஆப்ரிக்க கண்டத்தில் மனிதன் தோன்றி இருநூறு ஆயிரம் ஆண்டு காலமாக அவன் பயணித்து வந்த வாழித்தடம்

ஜூலை 11, 2020, சனி